மனித மூளையில் இருந்து உயிருடன் புழுவொன்றை வெற்றிகரமாக அகற்றி அவுஸ்திரேலிய மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் 64 வயதான பெண்ணொருவரின் மூளையில் இருந்தே இப்புழுவானது வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.
குறித்த பெண் நீண்டகாலமான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் அவரது மூளையை ஸ்கான் செய்த மருத்துவர்கள் மூளையில் 8cm நீளம் கொண்ட சிவப்பு நிறப் புழுவொன்று உயிருடன் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து அப்புழுவினை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். தற்பொழுது குறித்த பெண் நலமுடன் உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் ”அறிவியல் மொழியில் ஓஃபிடாஸ்காரிஸ் ரொபர்ட்ஸி (Ophidascaris robertsi) என அழைக்கப்படும் பாம்பு வகையைச் சேர்ந்த இவ்வகை புழுக்கள் அவுஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது.
ஒருவேளை இவர் உட்கொண்ட உணவுகளின் மூலம் இப்புழுவின் முட்டை இருந்திருக்கலாம் எனவும் அதுவே புழுவாக உயிர் பெற்று, இரத்தத்தில் கலந்து, மூளைக்கு சென்று, அங்கேயே உண்டு அதன் மூலம் உயிர் வாழ்ந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் ” மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.