நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் கீழ் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 656 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 535 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் இருந்த 121 சந்தேக நபர்களும் அடங்கியுள்ளனர்
இந்த சுற்றிவளைப்பில் 241 கிராம் 913 மில்லி கிராம் ஹெராயின், 139 கிராம் 892 மில்லி கிராம் ஐஸ்,1 கிலோ 744 கிராம் கஞ்சா, 27,780 கஞ்சா செடிகள், மாவா 10 கிராம், 1521 போதை மாத்திரைகள், உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

















