ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்கான விலைமனுக்கள் கோரும் நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்கிழமை ) நடைபெறவுள்ளது.
அதன்படி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விலைமனுக்களை சமர்ப்பிக்க முடியும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த விலைமனுக்கள் கோரும் நடவடிக்கைகளை கண்கானிப்பதற்கு சிறப்பு தொழில்நுட்ப குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
விலைமதிப்பீட்டு அறிக்கையை தயாரித்த பின்னர் அது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
மேலும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முன்மொழியப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.