இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட 21 தமிழக மீனவர்கள் நேற்றைய தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தினர் ஊடாக, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
இந் நிலையில் குறித்த வழக்கை விசாரித்த நிதிமன்றம் எதிர்வரும் 27ஆம் திகதி வரை அம் மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.