உரிய திகதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்திருப்பதாக இலங்கை ராமன்ய மகா நிகாய மாநாயக்க தேரர் மகுலெவே விமல தேரரைச் சந்தித்தபோது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டி அல்விட்டிகல மாவத்தையில் அமைந்துள்ள ராமன்ய மகா நிகாய சங்க சபையின் மாநாயக்க தேரர் மகுலெவே விமல தேரரை சந்தித்து ஆசிப் பெற்றுக்கொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்களில் இருந்து 5 வருடங்களாக குறைக்க நானே பரிந்துரைத்தேன் எனவும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
இதேவேளை, இன்று இந்நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதுடன், தற்போது அஸ்வெசும வேலைத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டிருந்தார்.