யாழ். ஓட்டுமடத்தைச் சேர்ந்த மரக்காலை உரிமையாளர் ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறைக் கும்பலொன்று அவரது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது அவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில், யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.