காலை 10.00 மணி வரை முல்லைத்தீவில் 28.61% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்
அதன்படி வன்னி தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணிக்கு 137 வாக்களிப்பு நிலையங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது மக்கள் ஆர்வமாக வாக்களித்தவாறு இருக்கிறார்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 86889 வாக்காளர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளார்கள் என்றும் காலை 10 மணி வரை 24859 பேர் வாக்களித்துள்ளார்கள்
அதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்திலே 3566 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதிபெற்றுள்ளார்கள் 3515 பேர் வாக்களித்துள்ளார்கள் மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமுகமாகவும் அமைதியாகவும் நடைபெற்று வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்