வெனிசுலா நாட்டு ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறை பிடித்துள்ளது.
வெனிசுலாவை இனி நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஐநா சபையின் அவசர பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது.
வெனிசுலா மீதான அமெரிக்கா தாக்குதல் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது..
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும், இதற்கு அந்த நாட்டின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறி அமெரிக்கா அவரை சிறைபிடித்துள்ளது.
வெனிசுலாவில் வான்வழி தாக்குதல் நடத்தி நிகோலஸ் மற்றும் அவரின் மனைவியை அமெரிக்கா சிறை பிடித்துள்ளது. இது அந்த நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரோ சிறைபிடிக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு, இனிமேல் வெனிசுலாவை நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.
மேலும், வெனிசுலா மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. நிகோலஸ் மதுரோ நாடு கடத்தப்பட்டுள்ளார். என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.
இது வெனிசுலாவில் அசாதரண சூழலை உருவாக்கியுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் நிகோலஸ் மற்றும் அவரின் மனைவி, இன்று நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர்.
இதனிடையே வெனிசுலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெனிசுலா நாட்டின் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ், அந்த நாட்டின் எண்ணெய் வளம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளை கண்காணித்து வருகிறார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அவர் வெனிசுலா நாட்டின் துணை அதிபராக இருந்தார். 56 வயதான டெல்சி ரோட்ரிக்ஸ் வழக்கறிஞர் ஆவார்.
அவர் வெனிசுலா நாட்டின் முதல் பெண் துணை ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றவர்.
அமெரிக்காவின் நெருக்கடிகளை தாக்கு பிடித்து, இந்த பிரச்சனையில் இருந்து எப்படி தீர்வு கொடுக்க போகிறார் என்பதை மொத்த உலகமும் உற்று நோக்கி வருகிறது.
இந்நிலையில் வெனிசியூலாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்காவுக்கு அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரொட்ரிகஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
அரசின் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்ட ரொட்ரிகஸ் இன்ஸ்டாகிராமில் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் தெரிவிக்கையில்,
”உலகிற்கும், அமெரிக்காவுக்கும் வெனிசுவேலா இருந்து ஒரு செய்தி. வெனிசுவேலா அமைதியான வாழ்வுக்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்கிறது.
எங்கள் நாடு வெளிப்புற அச்சுறுத்தல்கள் இல்லாமல் மரியாதையுடன், சர்வதேச ஒத்துழைப்புடன் வாழ ஆசைப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டின் உள் அமைதியின் மூலம் உலக அமைதி கட்டமைக்கப்படுகிறது என்பதை நாங்கள் நம்புகிறோம்.
அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவுக்கு இடையே இறையாண்மை சமத்துவம் மற்றும் தலையீடு இல்லாத மரியாதைக்குரிய சர்வதேச உறவுகளை நோக்கி நகர்வதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.
நீடித்த சமூக இணை வாழ்வை வலுப்படுத்த, சர்வதேச சட்டத்தின் கட்டமைப்பில் பகிரப்பட்ட வளர்ச்சியை நோக்கிய ஒத்துழைப்பு விவகாரத்தில் அமெரிக்க அரசாங்கத்தை எங்களுடன் இணைந்து செயற்பட அழைக்கிறோம்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்களே, எங்களின் பிராந்தியமும் மக்களும் அமைதி மற்றும் உரையாடலுக்கு தகுதியானவர்கள், போருக்கு அல்ல.
அமைதி மற்றும் உரையாடலுக்கு தகுதியானது. இதுவே ஜனாதிபதி மதுரோவின் செய்தியாக இருந்து வருகிறது. தற்போது அனைத்து வெனிசுவேலாவின் செய்தியாக இருக்கிறது.
வெனிசுவேலாவுக்கு அமைதி, வளர்ச்சி, இறையாண்மை மற்றும் எதிர்காலத்திற்கான உரிமை உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

















