முதியவர்களான கணவனும் மனைவியும் விஷம்; உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது என பொலிசார் தெரிவித்ததுடன் அந்த பகுதியில் மக்கள் பெரும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளனர்.
தன்னாமுனை இராசையா லேனைச் சேர்ந்த 74 வயதுடைய அன்டனி சில்வெஸ்டர், அவரது மனைவியான 73 வயதுடைய மேரி ஜெர்மைன் என்ற இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிசாருக்கு பணிப்புரை வழங்கியதையடுத்து சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.















