வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதியில் அரசினால் மேற்கொள்ளப்படும் பௌத்தமயமாக்களினை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.
வவுனியா தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் குறித்த கவனியீர்ப்பு போராட்டத்திலே ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது பௌத்தமயமாக்களை கண்டிப்பதோடு காணாமல் ஆக்கப்பட்ட ஒரு பிள்ளைகள் உறவினர்கள் நீண்டகாலமாக எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில் அவர்களின் உறவினர்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்து பதாதைகளை ஏந்தியவாறும், அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.














