நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் வெடித்த கலவரத்தின்போது காயமடைந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இருவர் பாதுகாப்பு அதிகாரிகள் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் குழுவினர் இடையே இந்த பதற்றமான சூழல் ஏற்பட்டதாகக் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச் சம்பவத்தின் போது பல சிறை அதிகாரிகள் காயமடைந்தனர்.
மோதலில் காயமடைந்த சுமார் 35 பேர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலோர் பாதுகாப்புப் பணியாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, நீர்கொழும்பு (Negombo) பொலிஸ் நிலையத்துடன் சேர்த்து மிரிகம (Mirigama) மற்றும் வெயாங்கொட (Veyangoda) உள்ளிட்ட சுற்றியுள்ள பொலிஸ் நிலையங்களிலிருந்தும் அதிகாரிகளை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பதற்றமான சூழலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர்.
இதற்கிடையில், நேற்று (05) பிற்பகல் சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட கலவரத்தின்போது, இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன், சுமார் 34 பேர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் தெரிவித்தார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் அமைதியின்மை!
நீர்கொழும்பு, சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப் பெற்ற தகவல்களின்படி, இன்று காலை சிறைச்சாலையில் மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டது; இதில் சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்படப் பலர் காயமடைந்தனர்.
அண்மைய சம்பவத்தில் சுமார் 25 பேர் காயமடைந்து, தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர பொலிஸாரும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் களமிறக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் கைதிகளின் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட பதற்றமான சூழல் இன்று காலைக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
நேற்று விளக்கமறியல் கைதிகளுக்கும் தண்டனை பெற்ற கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.












