ஹென்றி நோவாக்கின் மரணம் தொடர்பில் அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரபல்யங்கள் வெளியிட்டுவரும் கருத்துள் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கக்கூடும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது.
இந்த மரணம் குறித்த விவகாரத்தில் பிரித்தானியாவின் காவல்துறை செயல்பாடுகள் மற்றும் குடியேற்றக் கொள்கைகள் தொடர்பாக அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வாங்ஸ் உட்பட சிலர் வெளியிட்டுவரும் கருத்துகளை கண்டிப்பதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது.
நாட்டின் காவல்துறை அமைப்பு சட்டத்தின் கீழ் சமமாக செயல்படுகிறது என்றும், எந்தவித அமைப்பு சார்ந்த பாகுபாடும் இல்லை என்றும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க தரப்பில் இருந்து சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், பிரித்தானியா தனது குடியேற்றக் கொள்கைகள் மனித உரிமைகள் மற்றும் சட்டப்பூர்வ நடைமுறைகளின் அடிப்படையில் செயல்படுகின்றன எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக சுயாதீன விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ள அரசாங்கம், விசாரணை முடிவுகளுக்கு முன்பாக அரசியல் ரீதியான முடிவுகளுக்கு வருவது பொருத்தமற்றது என்றும் வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இடையிலான நீண்டகால கூட்டுறவு வலுவாக தொடரும் நிலையில், தனிப்பட்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உறவுகள் பாதிக்க கூடாததெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
















