யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் ஒளிபாய்ச்சி சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் முயற்சிக்காக மிக இரகசியமாக கடற்கரை பகுதிக்கு உழவு இயந்திரம் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்ட சட்டவிரோத சுருக்குவலையினை மருதங்கேணி பொலிசார் பறிமுதல் செய்ததுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மீன்பிடி அதிகரித்துள்ளதால் அதனை தடுக்கும் முயற்சியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் மற்றும் மருதங்கேணி பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று இரவு கட்டைக்காட்டில் தொடர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட போது உழவு இயந்திரத்தில் கடற்கரை பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்ட சுருக்குவலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.















