இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி-20 போட்டி, இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.
அஹமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இந்தியா அணிக்கு விராட் கோஹ்லியும் இங்கிலாந்து அணிக்கு ஓய்ன் மோர்கனும் தலைமை தாங்கவுள்ளனர்.
இதுவரை நடைபெற்று முடிந்துள்ள ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின், இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியினை பதிவுசெய்துள்ளன.
ஆகவே இப்போட்டியில் வெற்றிபெறுவதற்கு இரு அணிகளும் கடுமையாக போராடவுள்ளன. இரு அணிகளிலும் பலம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் வெற்றியை கணிப்பது கடினம். ஆகவே போட்டியின் முடிவை பொறுத்திருந்து பார்ப்போம்…