தாய்லாந்து சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி 6 ஆயிரத்து 853 தொற்றாளர்கள் சிறைச்சாலைகளில் இனங்காணப்பட்டுள்ளமையை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) இனங்காணப்பட்டுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 635 ஆக அதிகரித்துள்ளது.
இது முன்பு இனங்காணப்பட்ட தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கையை விட இரு மடங்கு அதிகமாகவுள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சிறைச்சாலைகளில் இருந்து புதிய கொத்தனிகள் உருவாகி வருவதாக தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் தாய்லாந்தில் இதுவரை ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 82 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 614 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.