நேபாளத்தில் மூன்று நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக 43ஆக இந்த எண்ணிக்கை இருந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) மீட்பு குழுவினர் மேலும் 34 உடல்களை மீட்டனர்.
இந்தியாவின் எல்லையான கிழக்கு நேபாளத்தின் பஞ்ச்தார் மாவட்டத்தில் 24பேர், இலத்தில் 13பேர் மற்றும் மேற்கு நேபாளத்தில் உள்ள தோதியில் 12 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக உட்துறை அமைச்சக அதிகாரி தில் குமார் தமாங் தெரிவித்தார். மற்றவர்கள் மேற்கு நேபாளத்தில் வேறு இடங்களில் உயிரிழந்துள்ளனர்.
இதுதவிர, 22 பேர் காயமடைந்துள்ளதாகவும், 26 பேர் காணாமல் போனதாகவும் உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் நிவாரணமாக 1,700 டொலர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தலைநகர் காத்மாண்டுக்கு மேற்கே சுமார் 350 கிமீ (220 மைல்), தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மேற்கு நேபாளத்தில் இரண்டு நாட்களாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 60 கிராமங்களை அடைவதற்கான முயற்சிகளுக்கு இடையூறாக ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.