ஆண்களுக்கான ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில், வெற்றிபெற்று செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இந்த சம்பியன் பட்டம் மூலம் ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் வரலாற்றில், அதிக சம்பியன் பட்டங்களை வென்ற சுவிஸ்லாந்தின் ரொஜர் பெடரருடன் ஜோகோவிச் இணைந்தார். இருவரும் தலா ஆறு முறை சம்பியன் பட்டங்களை வென்றுள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நோர்வேயின் காஸ்பர் ரூட்டை எதிர்கொண்டார்.
எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், சிறப்பாக விளையாடிய நோவக் ஜோகோவிச், 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் ஜோகோவிச் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றார்.