நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று மதியம் 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான காலநிலை நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் என்பதனால் அந்த பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் கடற்பரப்புகளில், மணித்தியாலத்துக்கு 20 முதல் 30 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்பதனால் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.