பிரேசிலில் லொறி ஒன்றின் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில், 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிரேசிலின் தெற்குப் பகுதியில், ரியோ கிராண்டேவில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த பேருந்து நிலை தடுமாறி, அந்த வழியாக எதிரே வந்த லொறி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில், 17 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் பலத்த காயமுற்றனர்.
விபத்து குறித்து அறிந்த பொலிஸார் , சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
லொரியில் இருந்த மண் பேருந்து மீது கொட்டியதால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது.
காயம் அடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
விபத்து குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




















