இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து புங்குடுதீவு மீனவர்கள் கன்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புங்குடுதீவு ஆலடி சந்தியில் இருந்து இன்று காலை 11 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த ஒரிரு நாட்களுக்கு முன்னர் புங்குடுதீவு மீனவர்கள் நெடுந்தீவிற்கு அண்மித்த பகுதியில் நண்டு வலைகளை வீசிவிட்டு காத்திருந்த போது, இந்திய மீனவர்களின் அத்துமீறி நுழைந்து மீனவர்களின் வலைகளை அறுத்து சென்றுள்ளனர்.
சுமார் 75 லட்சம் பெறுமதியான வலைகளை அறுத்துச் சென்றுள்ளனர்.
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து புங்குடுதீவு ஆலடி சந்தியில் ஒன்று கூடிய புங்குடுதீவு மீனவர்கள் வீதி வழியாக புங்குடுதீவு வாடி வரைக்கும் ஊர்வலமாக சென்று, கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.














