கார்லிங்ஃபோர்ட் லோக் (Carlingford Lough) கடற்பரப்பில் மீனவர்கள் இருவர் படகில் பயணித்த நிலையில் ஒருவர் நேரில் மூழ்கி காணாமல்போயுள்ளர்.
இந்நிலையில் காணாமல் போன ஒருவரைத் தேடி ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் உதவியுடன் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிரீன்காஸில் முனை (Greencastle point) அருகே இந்த மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் அதில் இருந்த ஒரு நபர் உள்ளூர் படகு ஒன்றின் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் படகிலிருந்த மற்றொரு மீனவர் கடலில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவம் குறித்து அயர்லாந்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆண்ட்ரூ முயர் (Andrew Muir) தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.
படகு மூழ்கிய செய்தி மீனவ சமூகத்திற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் கார்லிங்ஃபோர்ட் மீனவ சமூகத்திற்கும் தனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொண்டதுடன், தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மீட்புக் குழுவினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.













