மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அமைந்துள்ள நீர்தேக்கங்களில் நேற்று இரவு முதல் கடும் மழை பெய்து வருகின்றது.
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் விமலசுரேந்திர நீர்த்தேக்கம் இன்று காலை முதல் வடிய ஆரம்பித்துள்ளது.
அத்துடன், காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நிரம்பி வழியும் மட்டத்தை நெருங்கி வருவதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்னிலையில் பெய்து வரும் மழையினால் அப்பகுதியில் சீரற்ற காலநிலை நிலவுவதுடன், ஹட்டன் – நுவரெலியா, ஹட்டன் – கொழும்பு வீதிகளில் பயணிக்கும் வாகனங்களை கவனமாகவும் மெதுவாகவும் செலுத்துமாறு ஹட்டன் பொலிஸார் சாரதிகளிடம் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது