தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
அதன்படி ராமேஸ்வரம் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து நேற்று மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரால் இந்த இவர்கள் கைது செய்யப்பட்டு தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்
மேலும் முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் 14 பேரும் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பட உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது