பாலஸ்தீன ஜனாதிபதி Mahmoud Abbas மற்றும் இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
பாலஸ்தீன ஜனாதிபதி எதிர்வரும் 25 ஆம் திகதி இஸ்ரேலுக்கு விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ள நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மோதலில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் ஏனைய சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.
15 வருடங்களின் பின்னர் பாலஸ்தீன ஜனாதிபதிக்கும் இஸ்ரேல் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெறும் முதலாவது சந்திப்பு இதுவென அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.