அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு மூவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
78, 36 மற்றும் 07 வயதான மூவரே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெண் ஒருவரும், சிறுமி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன் அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.