Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

மக்களின் பிரச்சினைகளில் அக்கறையற்ற அரசியல்வாதிகள் ஓரங்கட்டப்பட வேண்டும்: வியாழேந்திரன்

In இலங்கை
Updated: 12:16 GMT, Apr 18, 2017 | Published: 11:39 GMT, Apr 18, 2017 |
0 Comments
1204
This post was written by : Ravivarman
S.Viyalendran

மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தேடிக் கொடுக்க திராணியற்றிருக்கும் அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலில் ஓரங்கட்டப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியில் நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு கிழக்கிலே உள்ள சில அரசியல் தலைமைத்துவங்களின் அரசியல் சுயநலப் போக்கு காரணமாக மக்களின் காணிகளை இழக்க வேண்டியேற்பட்டுள்ளது. முன்னர் இருந்த அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையினால் எல்லை கிராம மக்கள் தமது காணிகளை இழந்துள்ளார்கள்.

காலம் காலமாக மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் ஏமாற்றுப் பேர்வழிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் அதன் மூலம் சாதாரண ஏழை மக்களுக்கு விமோசனம் கிட்ட வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் மேலும் தெரிவித்தார்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.