Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘ஸ்கெட்ச்’ பட பாடலுக்காக வெளிநாடு செல்லும் படக்குழு

In சினிமா
Updated: 07:51 GMT, May 28, 2017 | Published: 07:26 GMT, May 28, 2017 |
0 Comments
1474
This post was written by : Shailu
Vikram-Tamanna

இயக்குநர் விஜயசந்தர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘ஸ்கெட்ச்’

இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்து வருகிறார். இவர் விக்ரமுடன் இணைந்து நடிப்பது இதுவே முதல் தடவையாகும்.

விக்ரம் இப்படத்தில் மோட்டார் சைக்கிள் திருடும் வாலிபனாக நடித்துள்ள நிலையில், அவருடைய காதலியாக தமன்னா நடிக்கிறார். இவர்கள் இருவருடைய படக் காட்சிகள் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டுள்ளன.

ஒரு பாடலுக்கு விக்ரம் நடனமாடும் காட்சி சென்னையில் படமாக்கப்படுகிறது. இதற்காக பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது.

மேலும் விக்ரம்-தமன்னா ஜோடியின் டூயட் பாடல் ஒன்று வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ள நிலையில், இதற்காக படக்குழுவினர் வெளிநாடு பயணிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg