Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தல – தளபதி இரசிகர்களை மகிழ்விக்க வருகிறது விசிறி!

In சினிமா
Updated: 09:42 GMT, Jan 13, 2018 | Published: 09:42 GMT, Jan 13, 2018 |
0 Comments
1127
This post was written by : Ravivarman

தல, தளபதி இரசிகர்களை மையமாக வைத்து வெற்றி மகாலிங்கம் இயக்கியுள்ள ‘விசிறி’ படம் அடுத்த மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெ.சா.புரொடக்சன்ஸ் சார்பில் ஏ.ஜமால் சாஹிப் கி.ஜாபர் சாதிக் ஆகியோருடன் இணைந்து, வெற்றி மகாலிங்கம் தயாரிக்கும் படம் ‘விசிறி’.

இதில் ராம்சரவணா, ராஜ், சூர்யா ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ளனர். ரெமோனா ஸ்டெபனி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் பி.டி.அரசகுமார் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் ஆகிய ‘தியாகராஜ பாகவதர் – பி.யூ.சின்னப்பா இரசிகர்களிடம் தொடங்கிய மோதல், ‘எம்.ஜி.ஆர். -சிவாஜி, ‘ரஜினி -கமல்’ என்று தொடர்ந்தது.

அந்த வரிசையில் ‘தல-தளபதி’ இரசிகர்களின் மோதல் மிக முக்கியமானது மட்டுமல்ல, சுவாரஸ்யமானதும் கூட. அதை மையக்கருவாக வைத்து விசிறி படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம்.

தணிக்கைக் குழுவினர் ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளதையடுத்து இப்படத்தை பெப்ரவரி மாதம் 2ம் திகதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg