பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர் கைது!
ஹிங்குராங்கொடயில் ஆயுர்வேத மருந்தகம் ஒன்றில் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரை ஒன்றினை சந்தேக நபர் 200 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடமிருந்து 300 இற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.