மொடேர்னா நிறுவன தடுப்பு மருந்துக்கும் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு!

அமெரிக்காவின் மருந்து நிறுவனமான மொடேர்னாவின் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் 94 வீதம் பயனுள்ளதாக இருப்பதாக அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க அவசரகால அங்கீகாரம் வழங்கப்படலாம் என கட்டுப்பாட்டாளர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
மொடேர்னாவின் தடுப்பூசியின் இரண்டு டோஸ் விதிமுறை மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனவும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியைப் பயன்படுத்துவதில் எந்தவொரு பாதுகாப்பு சிக்கல்களும் ஏற்படவில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் பகுப்பாய்வின்படி இது அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்ட இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பூசியாக மாறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.