வெங்காய வெடி வைத்து மனைவியைக் கொலைசெய்த கணவன் வவுனியாவில் கைது!
In இப்படியும் நடக்கிறது June 23, 2019 4:06 pm GMT 0 Comments 7023 by : Litharsan

வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் வெங்காய வெடியை வெடிக்க வைத்து மனைவியை கொலை செய்த நிலையில் தலைமறைவாக இருந்த கணவன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவரான 43 வயதுடைய து.ரவிச்சந்திரன் என்பரே செட்டிக்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செட்டிகுளம், துடரிக்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 4 பிள்ளைகளின் தாயார் ஒருவர் வெங்காய வெடியை முகத்தில் வெடிக்க வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.
குறித்த கொலைச் சம்பவம் குறித்து செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
கொலைசெய்யப்பட்ட குறித்த பெண்ணின் கணவன் தலைமைவாகியிருந்த நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில் இன்று செட்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு முன்னால் உள்ள ஆலயத்தின் பின்புறமாகவுள்ள காட்டுப் பகுதிக்குள் மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் கையிலும் வெங்காய வெடி காரணமாக காயம் ஏற்பட்டுள்ளதால் பொலிஸ் பாதுகாப்புடன் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.