Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச சந்தையில் இழந்த இடத்தை மீண்டும் பெற்று விட்டோம் : ஈரான் பெருமிதம்

In வணிகம்
Updated: 15:16 GMT, Mar 18, 2016 | Published: 15:15 GMT, Mar 18, 2016 |
0 Comments
1184
This post was written by : Anojkiyan

தாம் சர்வதேச சந்தையில் இழந்திருந்த எண்ணெய் சந்தை பங்கை மீட்டெடுத்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஈரானின் எண்ணெய் வள அமைச்சர் Bijan Zangeneh,  தற்போது எய்தப்பட்டிருக்கும் இந்த நிலைமை மசகு எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் எண்ணெய் ஏற்றுமதியை மற்றும் எரிவாயு ஏற்றுமதி போன்றவைகளின் அதிகரிப்பு போன்றவற்றின் மூலம் சாத்தியமாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த ஜனவரிமாத நடுப்பகுதியில் ஈரானின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டதையடுத்து இதுவரையான காலப்பகுதியில், ஈரானிய பெற்றோலிய வள அமைச்சு எட்டிய சாதனைகளில் இது ஒரு பகுதி மட்டுமே எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த பல ஆண்டுகளாக ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளினால், ஈரான் தக்கவைத்திருந்த சர்வதேச எண்ணெய் சந்தைப் பங்குகளின் உச்ச நிலை பறிபோனது. எனினும் தடை நீக்கத்தின் பின்னர் தொடர்ச்சியாக முன்னெடுத்த முயற்சிகளின் பலாபலன்களாக தாம் இழந்த இடத்தை மீண்டும் பெற்றுவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக ஐரோப்பிய சந்தையில் ஈரானின் மசகு எண்ணெய் ஏற்றுமதியின் உச்ச வரம்பெல்லையானது, பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டமையை அடுத்த சில வாரங்களில் நாளொன்றுக்கு 1.4 மில்லியன் பீப்பாய்கள் என்ற நிலையை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg