Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னாபிரிக்காவை வீழ்த்தி ஆஸி ஆறுதல் வெற்றி

In கிாிக்கட்
Updated: 08:37 GMT, Nov 27, 2016 | Published: 08:37 GMT, Nov 27, 2016 |
0 Comments
1210
This post was written by : Anojkiyan

அடிலெய்டில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான பகலிரவு டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய அணி, 7 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி அணி, தனது முதல் இன்னிங்ஸிற்காக 76 ஓவர் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 259 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் அவுஸ்திரேலிய அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி, கவாஜாவின் சதத்துடன் அதிரடியாக விளையாடி 121.1 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 383 ஓட்டங்களை குவித்தது. இதையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்சை 124 ஒட்டங்கள் பின்னிலையில் தொடங்கிய தென்னாபிரிக்க அணி, கடும் நெருக்கடிக்கு மத்தியில் இரண்டாவது இன்னிங்ஸிற்hக 250 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்பின் 127 என்ற எளிய வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், முதல் இரு போட்டிகளில் தென்னாபிரிக்க அணியும், இறுதி போட்டியில், அவுஸ்திரேலிய அணியும் வெற்றிபெற்றது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக கவாஜாவும், தொடரின் நாயகனாக பிளண்டரும் தெரிவு செய்யப்பட்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg