Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போலந்து உறவுகளை வலுப்படுத்தும் விடயத்திற்கு பிரெக்சிற் தடையாக அமையாது : மே

In
Updated: 17:21 GMT, Nov 29, 2016 | Published: 06:20 GMT, Nov 29, 2016 |
0 Comments
1333
This post was written by : Sylviya

போலந்துடனான உறவுகளை வலுப்படுத்துவதில், பிரெக்சிற் விவகாரம் தடையாக அமையாது என பிரித்தானிய பிரதமர் தேரேசா மே (Theresa May) தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், போலந்துடனான பாதுகாப்பு (Defence), இணைய பாதுகாப்பு (Cyber security) மற்றும் தொழில்முயற்சி தொடர்பில் உறவுகள் வலுப்படுத்தப்படும் என பிரதமர் மே தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த தகவலை அவர் போலந்து பிரதமர் பீட்டாவை (Beata Szydlo) சந்தித்து உரையாற்றிய போதே தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் வாழும் சுமார் 900,000 போலந்து நாட்டவர்களின் எதிர்காலம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த, பிரெக்சிற் வரை காத்திருக்க கூடாது எனவும் அதற்கு முன்னதாகவே தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மே வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த போலந்து பிரதமர் பீட்டா, “இது ஒரு முக்கியமான விடயம். ஆனால் அதற்கு இரு தரப்பிடம் இருந்தும் பரஸ்பர ஒத்துழைப்பு வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா மற்றும் போலந்துக்கு இடையில் உச்சிமாநாடு ஒன்று நடைபெற்றிருப்பது இதுவே முதன் முறை என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், ஐரோப்பாவில் ரஷ்யர்கள் ஆக்கிரமிப்பதை தடுக்கும் வகையில், சுமார் 150 பிரித்தானிய துருப்புக்கள் போலந்துக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனவும் மே தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg