Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாவீரர் தின அனுமதி மக்களை திசைதிருப்பும் முயற்சியா?

In இலங்கை
Updated: 02:35 GMT, Nov 30, 2016 | Published: 02:35 GMT, Nov 30, 2016 |
0 Comments
1411
This post was written by : Varshini

இம்முறை மாவீரர் துயிலும் இல்லங்களை சுத்தப்படுத்தவும் அங்கு அஞ்சலிப்பதற்குமான சூழல் ஏற்பட்டிருந்தமையானது, எதிர்வரும் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவையில் இந்நிலைமை குறித்து தெளிவுபடுத்துவதற்காக இருக்கலாமென ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மட்டுமன்றி, கடந்த வருடத்தில்கூட இதற்கான நிலைமை காணப்படவில்லையென்பதை சுட்டிக்காட்டிய சுரேஸ் பிரேமச்சந்திரன், யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான வாய்ப்பை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம் என ஐ.நா.வில் குறிப்பிடுவதற்காக இருக்கலாமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காரணம் கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் யுத்த காலத்தில் மரணித்துப்போன உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை உண்டு எளவும் அதனை இலங்கை அரசாங்கம் மறுதலிக்கக் கூடாதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளதையும் சுரேஸ் பிரேமச்சந்திரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, புதிய அரசியல் யாப்பில் வடக்கு – கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி ஆட்சி முறையை மக்கள் கோரிநிற்கின்ற நிலையில், அவற்றிலிருந்து மக்களை திசைதிருப்புவதற்காக காட்டும் பாசாங்குத்தனமாகவும் இது இருக்கலாமென சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg