Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆஃப்கானில் கடத்தப்பட்ட பேராசிரியர்கள்: காணொளியை வெளியிட்டனர் தலிஃபான் தீவிரவாதிகள்

In
Updated: 07:04 GMT, Jan 12, 2017 | Published: 07:02 GMT, Jan 12, 2017 |
0 Comments
1304
This post was written by : Elakkiya

ஆஃப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு கடத்தப்பட்ட அவுத்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த நபர்கள் குறித்த காணொளியை தலிஃபான் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

ஜனவரி முதலாம் திகதி பதிவேற்றப்பட்டதாக கூறப்படும் இந்த காணொளியில் அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பிடம் கடத்தப்பட்ட இருவரும் தம்மை விடுதலை செய்யுமாறும், இதற்காக சிறைக்கைதிகள் பரிமாற்றம் ஒன்றை செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் காணொளி குறித்த கருத்துக்களை வழங்குவதற்கோ, நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கோ அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மறுத்துள்ளது.

இவ்வாறிருக்க ஆஃப்கானில் கடத்தப்பட்ட அவுஸ்திரேலிய நபரை மீட்பதற்கு அவுஸ்திரேலிய அரசு முயற்சிப்பதாக அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த கெவின் கிங், மற்றும் அவுஸ்திரேலிய நபரான திமோத்தி வீக்ஸ் ஆகிய இருவரும் ஆஃப்கானிஸ்தானின் தலைநகர் காபூலிலுள்ள அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக பணியாற்றினர்.

இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பாதுகாவலர் சீருடையில் வந்த துப்பாக்கிதாரிகளால் குறித்த இருவரும் கடத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg