Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நரசிம்ம மூர்த்தியை வழிபடும் போது அவருக்கான மந்திரத்தை உச்சரிப்பது அவசியம்

In ஆன்மீகம்
Updated: 11:05 GMT, Feb 10, 2017 | Published: 11:04 GMT, Feb 10, 2017 |
0 Comments
1158
icon_com
This post was written by : Elakkiya
201702101539238088_narasimha-worship_SECVPF

நரசிம்ம மூர்த்தியை வழிபடும் போது, அவருக்கான காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபட்டு வந்தால் வாழ்வில் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

நாராயணனின் தீவிர பக்தனாக இருந்தவன் பிரகலாதன். இவன் இரண்யகசிபு என்ற அசுரனின் மகன். தன்னுடைய மகன் தனது எதிரியான நாராயணனின் நாமத்தைச் சொல்வதை இரண்யகசிபுவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே பிரகலாதனை அழைத்து, ‘நீ நாராயணனை வழிபடக் கூடாது. என்னைத்தான் வணங்க வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தினான்.

பிரகலாதனோ, தந்தைக்கே அறிவுரை கூறத் தொடங்கி விட்டான். ‘நாராயணன் தான் கடவுள். அவரை வணங்கி நல்வாழ்வு பெறுங்கள்’ என்றான். கோபம் அடைந்த இரண்யகசிபு, மகன் என்றும் பார்க்காமல் பிரகலாதனைக் கொல்லத் துணிந்தான். ஆனால் அவன் மேற்கொண்ட அனைத்து வழிகளும் அடைப்பட்டன. ஒவ்வொரு முறையும் நாராயணர், பிரகலாதனை காப்பாற்றிக்கொண்டே இருந்தார்.

மகனை அழிக்கவும் முடியவில்லை. அவனை தன் வழிக்கு கொண்டுவரவும் முடியவில்லை. இதனால் இரண்யகசிபுவின் ஆத்திரம் உச்சத்தை அடைந்தது. ஒரு நாள் தன் மகன் பிரகலாதனிடம், ‘உன்னுடைய நாராயணன் எங்கிருக்கிறான்?’ என்று கேட்க, அதற்கு பிரகலாதன், ‘அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்’ என்றான்.

உடனே இரண்யகசிபு, ‘அப்படியானால் இந்த தூணில் இருக்கிறானா?’ என்று கேட்டு தூணை உடைக்க, அதில் இருந்து சிங்கத் தலையும், மனித உடலுமாக நரசிம்மர் வெளிப்பட்டார். பின்னர் இரண்யகசிபுவை வதம் செய்தார் என்பது வரலாறு. இறைவன் நரசிம்ம மூர்த்தியாக அவதாரம் செய்தது, ஆந்திர மாநிலம் அகோபிலம் திருத்தலத்தில் என்பது புராண வரலாறு. திருமாலின் அவதாரங்களிலேயே உக்கிரமான அவதாரம் நரசிம்ம அவதாரம் தான்.

இந்த நரசிம்ம மூர்த்தியை வழிபடும் போது, அவருக்கான காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபட்டு வந்தால் வாழ்வில் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg