Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவை சொந்த மண்ணில் சாய்க்குமா?: தீவிர பயிற்சியில் அவுஸ்ரேலியா

In கிாிக்கட்
Published: 06:13 GMT, Feb 16, 2017 |
0 Comments
1187
icon_com
This post was written by : Anojkiyan
mu

சொந்த மண்ணில் 19 டெஸ்ட் போட்டிகளில் தோல்விகளை சந்திக்காமல் உள்ள விராட் கோஹ்லியின் தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்வதற்கு முன்னோட்டமாக, நேற்று (புதன்கிழமை) அவுஸ்ரேலிய அணி வீரர்கள், மும்பை பிராபோர்ன் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டனர்.

டேவிட் வோர்னர், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், உஸ்மான் கவாஜா ஆகியோர் நீண்ட நேரம் வலையில் துடுப்பாட்ட பயிற்சி மேற்கொண்டனர்.

மேலும் ஓட்டம் சேர்க்க ஓடுவதில் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாக அதற்கான பயிற்சிகளையும் துடுப்பாட்ட வீரர்கள் மேற்கொண்டனர். சில வீரர்கள் சிலிப் திசையில் பிடியெடுப்பு செய்வது தொடர பான பயிற்சியில் ஈடுபட்டனர்.

4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ள ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அவுஸ்ரேலிய அணி நாளை (வெள்ளிக்கிழமை) பிராபோர்ன் மைதானத்தில், இந்தியா ஏ அணிக்கு எதிராக 3 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 23ஆம் திகதி புனேயில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg