Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கருணாவிற்கு கொலை அச்சுறுத்தல் என்பது புரளி: கமலதாஸ் (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 11:32 GMT, Feb 24, 2017 | Published: 08:25 GMT, Feb 24, 2017 |
0 Comments
1501
icon_com
This post was written by : Risha

மஹிந்த அரசாங்கத்தில் பிரதியமைச்சராக செயற்பட்டுவந்த கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை எவரும் கொலை செய்ய முயற்சிக்கவில்லை. எமது புதிய வரவை சகித்துக் கொள்ள முடியாத சிலரினால் இவ்வாறான புரளிகள் எழுப்பப்பட்டுள்ளன என தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் த.கமலதாஸ் தெரிவித்துள்ளார்.

கருணா அம்மானை கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று தகவல் வெளியானது. இது தொடர்பில் ஆதவன் செய்திச் சேவை சார்பில் அவரை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களை முன்னாள் போராளிகள் கொலை செய்ய முயற்சிப்பதாக சித்தரிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், அவ்வாறு எமது தலைவர் குறிவைக்கப்படுவதற்கான எந்த அவசியமும் இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருணாவை கொலை செய்ய முயற்சித்த சந்தேகநபர் கைது?

மஹிந்த அரசாங்கத்தில் பிரதியமைச்சராக செயற்பட்டுவந்த கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக சகோதர மொழி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகின்றது.

குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் எனவும், மத வழிப்பாட்டிற்காக மட்டக்களப்பிலுள்ள கோவிலுக்கு கருணா கடந்த மாதம் சென்றிருந்த வேளையில், பலவந்தமாக அவர் மீது மோதிய ஒருவர், அவரது கழுத்தை நெரிக்க முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையிலேயே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  செய்தி வெளியாகி சமூக வலைத் தளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg