Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எகிப்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பொரிஸ் ஜோன்சன்

In
Updated: 09:45 GMT, Feb 25, 2017 | Published: 07:32 GMT, Feb 25, 2017 |
0 Comments
1182
icon_com
This post was written by : Sylviya
07

பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன் எகிப்து நாட்டு ஜனாதிபதியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவு செயலாளராக பதவியேற்றதன் பின்னர் பொரிஸ் எகிப்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது இதுவே முதல் தடவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விஜயத்தின் போது அவர் பிரித்தானியா மற்றும் எகிப்துக்கு இடையில் உள்ள இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர் எகிப்திய ஜனாதிபதி அப்துல் ஃபத்தாஹ் அல் – சிசி (Abdul Fattah al-Sisi) மற்றும் வெளியுறவு அமைச்சர் சமேஹ் ஷூக்ரி (Sameh Shoukry) ஆகியோரை சந்திக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விஜயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொரிஸ், “பிரித்தானியாவே எகிப்தின் முதல் தர பங்காளியாக விளங்குகின்றது. அத்துடன் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்த இரு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்பை பேணி வருகின்றன” என தெரிவித்துள்ளார்.

பொரிஸின் குறித்த விஜயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம், குறித்த விஜயத்தின் போது எகிப்தில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களையும் பொரிஸ் சந்திப்பார் என தெரிவித்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg