Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தஞ்சையிலும் அறவழிப் போராட்டம்

In இந்தியா
Updated: 06:35 GMT, Mar 29, 2017 | Published: 06:14 GMT, Mar 29, 2017 |
0 Comments
1122
icon_com
This post was written by : Elakkiya
farmers-protest2345-28-1490695414

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூரில் உள்ள விவசாயிகள் இன்று (புதன்கிழமை) அறவழிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோஷத்துடன் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் மற்றும் தஞ்சை விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றிருந்த நிலையில் அலுவலக நுழைவாயிலில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து பிரதான வீதியோரமாக அமர்ந்து விவசாயிகள் அறப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், டெல்டா மாவட்டங்களை ஒருங்கிணைந்த வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்த அறவழிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை விலகிச் செல்லப் போவதில்லை என்றும் போராட்டக்குழுவினர் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg