Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

கேப்பாபிலவில் ஒரு தொகுதி காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்: சுவாமிநாதன்

In இலங்கை
Published: 15:37 GMT, Apr 4, 2017 |
0 Comments
1233
This post was written by : Ravivarman
swam

முல்லைத்தீவு, கேப்பாபிலவு பகுதியில் 394 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்ற அமைச்சரான டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளையின் கீழ் ஈ.பி.டியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார். இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“394 ஏக்கர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசாங்கத்தினால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்கம் கேப்பாபிலவு மக்களது  மீள்குடியேற்றத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளில் அக்கறை கொண்டுள்ளது.

இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடனும் நாம் கலந்துரையாடி இருக்கின்றோம். அவர்களின் மீள்குடியேற்றத்திற்கான அனைத்து வசதிகளையும் வழங்கத் தயாராக இருப்பதுடன், இந்தப் பிரச்சினையில் என்னால் முடிந்த சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன்” என அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.