Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குஜராத் – பெங்களூர் அணிகளின் வெற்றியை தீர்மானிக்கும் விறுவிறுப்பான போட்டி இன்று

In விளையாட்டு
Updated: 05:50 GMT, Apr 18, 2017 | Published: 04:59 GMT, Apr 18, 2017 |
0 Comments
1131
This post was written by : Risha
GL-vs-RCB-Live-Streaming

பத்தாவது ஐ.பி.எல். தொடரின் 14ஆவது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) குஜராத் லயன்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதுகின்றன. ராஜ்கோட்டில் இரவு 8 மணிக்கு இப் போட்டி நடைபெறவுள்ளது.

புள்ளிப் பட்டியலில் 7ஆவது இடத்திலுள்ள குஜராத் அணிக்கும், பட்டியலில் இறுதியிலுள்ள பெங்களூர் அணிக்கும் இடையிலான இன்றைய போட்டியானது, இரு அணிகளினதும் வெற்றிப் பாதையை தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளது.

ஒன்பதாவது ஐ.பி.எல். தொடரில் அறிமுகமான குஜராத் அணி, முதல் தொடரிலேயே 3ஆவது இடத்தை பிடித்து ஆச்சரியம் அளித்திருந்த போதிலும், இந்த தொடரில் 4 போட்டிகளில் 3 தோல்விகளை சந்தித்து திணறி வருகின்றது.

இதேவேளை, கடந்த தொடரில் பெரியளவில் ஓட்டங்களை குவித்த பெங்களூர் அணி இம்முறை 5 போட்டிகளில் 4 தோல்விகளை சந்தித்து மிகவும் பலவீனமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg