Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெஜிடேரியன் முட்டை சப்பாத்தி

In
Updated: 05:36 GMT, Apr 25, 2017 | Published: 05:15 GMT, Apr 25, 2017 |
0 Comments
1185
This post was written by : Elakkiya

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி – 2
கடலை மா – 4 மேசைக்கரண்டி
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
சில்லி ப்ளேக்ஸ் – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாத்திரம் ஒன்றில் சப்பாத்தி மற்றும் எண்ணெயை தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி ஓரளவுக்கு இறுக்கமாக கலந்துகொள்ளவும்.

பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றவும். சூடாகியதும் ஒவ்வொரு சப்பாத்தியாக எடுத்து கல்லில் போட்டு, கலந்து வைத்துள்ள கலவையை தடவி எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான வெஜிடேரியன் முட்டை சப்பாத்தி தயார் !!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg