Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முத்தரப்பு ஒருநாள் தொடர்: பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது நியூசிலாந்து

In கிாிக்கட்
Updated: 07:11 GMT, May 18, 2017 | Published: 07:11 GMT, May 18, 2017 |
0 Comments
1401
This post was written by : Anojkiyan

முத்தரப்பு ஒருநாள் தொடரின் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில், நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அயர்லாந்தின் டப்ளின் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 257 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணியின் அதிகபட்ச ஓட்டமாக சவுமிய சர்க்கார் 61 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் பென்னட் 3 விக்கெட்டுகளையும், நீசாம் மற்றும் சொதி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து, 256 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூசிலாந்து அணி, 47.3 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றியை பதிவுசெய்தது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக டொம் லதம் 54 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் முஸ்தாபிஜூர் ரஹ்மான் மற்றும் ரூபல் ஹொசைன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். போட்டியின் ஆட்டநாயகனாக நீசாம் தெரிவுசெய்யப்பட்டார்.

முத்தரப்பு ஒருநாள் தொடரில் அயர்லாந்து, பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg