Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குழந்தைகளின் குறைபாடுகளை கண்டுபிடிக்கும் சிறப்பு சிகிச்சை அறை அமைக்கப்படும்: விஜயபாஸ்கர்

In இந்தியா
Updated: 04:38 GMT, May 20, 2017 | Published: 04:38 GMT, May 20, 2017 |
0 Comments
1344
This post was written by : Surenth

குழந்தை பிறந்து 28 நாட்களில் குழந்தைகளுக்கான பிறவி குறைபாடுகள் மற்றும் இதர அறுவை சிகிச்சை செய்வதற்காக சிறப்பு சிகிச்சை அறை விரைவில் திறக்கப்படவுள்ளதென தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் 25 இலட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயில் மற்றும் 1.3 கோடி ரூபா பெறுமதியான சிறப்பு அறுவை சிகிச்சை மையம் ஆகியன நேற்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை ஆசியாவிலேயே சிறந்த மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது என்றும் முன்னர் 837 படுக்கைகள் மாத்திரம் இருந்த நிலையில் தற்போது, 40 படுக்கைகள் மேலதிகமாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், வைத்தியசாலைகளில் குழந்தைகள் திருட்டை தடுக்கும் வகையில் கீழ்ப்பாக்கம் அரசு வைத்தியசாலையில் ‘பயோ மெட்ரிக்’ முறை முன்னெடுக்கப்பட்டவுள்ளது எனவ அவர் கூறினார்.

குறித்த ‘பயோ மெட்ரிக்’ முறைல் தாயின் கைவிரல் ரேகை வைத்தால் மாத்திரம் குழந்தை இருக்கும் பெட்டி திறக்கப்படும் எனவும் விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg