Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஞ்செஸ்டர் தாக்குதலுக்கு அஞ்சலி: இருளில் மூழ்கியது எம்பயர் ஸ்டேட் கட்டடம்

In
Updated: 06:47 GMT, May 24, 2017 | Published: 06:47 GMT, May 24, 2017 |
0 Comments
1406
This post was written by : Risha

மஞ்செஸ்டர் தற்கொலை குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், நியூயோர் எம்பயர் ஸ்டேட் கட்டடம் இருளில் மூழ்கியுள்ளது.

மஞ்செஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக உலகின் அதியுயர் கட்டடங்களில் ஒன்றாக விளங்கும் குறித்த கட்டடத்தின் மின்விளக்குகள் அனைத்தும் நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) அணைக்கப்பட்டிருந்தது.

மஞ்செஸ்டரில் நேற்று முன்தினம் இசை நிகழ்ச்சியொன்றின்போது இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய சல்மான் அபேடி என்ற நபரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, மேற்படி தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg