Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொழில் முயற்சியாளர்கள் அமைச்சின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும்: றிஷாட்

In இலங்கை
Updated: 10:55 GMT, May 29, 2017 | Published: 10:55 GMT, May 29, 2017 |
0 Comments
1340
This post was written by : Ravivarman

மன்னார் மாவட்டத்தில் உள்ள தொழில் முயற்சியாளர்களின் நலன் கருதி எமது அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களின் ஆலோசனைகளை தொழில் முயற்சியாளர்கள் முறையாகப் பெற்றுக் கொள்ளவேண்டும் என அமைச்சர் றிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வர்த்தக அமைச்சின் கீழ் செயற்படுகின்ற நிறுவனங்களை ஒருங்கிணைத்து மன்னார் நகரசபை மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை தொழில் முயற்சி இனங்காணலும் ஊக்க மூட்டலுக்குமான விழிப்புணர்வுச் செயலமர்வு இடம்பெற்றது. இதன்போது உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வன்னி மாவட்டம் யுத்தத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டதினால் இங்குள்ள மக்கள் சொந்தமாகவும், சுதந்திரமாகவும் சுயதொழில் செய்து வாழ வேண்டும் என்ற நோக்கிலேயே இந்தச் செயலமர்வு நடாத்தப்படுகின்றது.

சுய தொழில் முயற்சியாளர்கள் தமக்கு ஏற்ற, தாம் விரும்பிய தொழிலை மேற்கொள்வதற்கு எனது அமைச்சு உதவுவதுடன், அமைச்சின் கீழான நிறுவனங்கள், தொழில் முயற்சியாளர்களுக்குப் பொருத்தமான உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கத் திட்டமிட்டுள்ளது.

உங்களுக்கு ஏற்புடைய ஏதாவது ஒரு தொழிலை அடையாளப்படுத்தி அதிகாரிகளிடம் கொடுத்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதுடன், பயிற்சிகள், குறித்த தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் அல்லது கடன் உதவிகள் என்பன வழங்கப்படும்” என அமைச்சர் றிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.

18767414_1716148941734627_6519516738943040534_n 18740430_1716149185067936_9001683319997208360_n 18740304_1716149565067898_1916391097922257978_n 18700206_1716149045067950_8335338463339593858_n

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg