Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பரிஸ் விமான நிலையத்தில் மர்ம பொதி! – பயணிகள் வெளியேற்றம்

In ஐரோப்பா
Published: 11:03 GMT, Jul 2, 2017 |
0 Comments
1422
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
paris-airport-afp_650x400_61453963151

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் அமைந்துள்ள முக்கிய விமான நிலையமான ரொய்ஸி சார்ளஸ் டிகயூலி விமான நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மர்ம பொதியால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

குறித்த பொதியில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்பட்டு, பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டதோடு, விமான நிலையத்தில் இருந்த சுமார் இரண்டாயிரம் பயணிகள் அவசமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் எட்டு விமானங்கள் இரத்து செய்யப்பட்டதோடு, 20 விமானங்கள் தாமதமாகியுள்ளன.

விமான நிலையம் முழுவதும் தேடுதல் நடத்தி பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டதோடு, விமான பயணங்களும் வழமைக்குத் திரும்பின.

பிரான்ஸில் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதோடு, அச்சுறுத்தல்களும் தொடர்கின்ற நிலையில், முக்கிய இடங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ரோசி சார்ளஸ் டிகயூலி விமான நிலையமானது, ஐரோப்பாவின் இரண்டாவது மிகப் பெரிய விமான நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg