Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்தவின் நெருங்கிய நண்பருக்கு கிழக்கு ஆளுநர் பதவி?

In இலங்கை
Updated: 08:35 GMT, Jul 3, 2017 | Published: 08:35 GMT, Jul 3, 2017 |
0 Comments
1865
This post was written by : Varshini

கட்டாருக்கான இலங்கை தூதுவரும், பிரபல வர்த்தகரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பருமான ஏ.எஸ்.பி.லியனகே, கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்த ஒஸ்டின் பெர்ணான்டோ, நாளைய தினம் ஜனாதிபதி செயலாளராக பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில், வெற்றிடமாகும் கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு லியனகே நியமிக்கப்படலாமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜகிரியவில் உள்ள மிகவும் ஆடம்பரமான மயில் மாளிகைக்கு சொந்தக்காரரான ஏ.எஸ்.பி.லியனகே, அதனை தனது நெருங்கிய நண்பரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வழங்குவதற்கு தீர்மானித்ததை அடுத்து பல சர்ச்சைகளுக்கு முகங்கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் நல்லாட்சி அரசாங்கத்தால் அவர் கட்டாருக்கான தூதுவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், கிழக்கு மாகாண ஆளுநராக தமிழர் ஒருவரை நியமிக்கும் முயற்சியில் தமிழ் தரப்புக்கள் ஈடுபட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg